பித்தப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு முட்டை சாப்பிடலாமா?


நமது பித்தப்பையின் முக்கியமான செயல்பாடாக செரிமானத்திற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட பித்தத்தை சேமித்து அதனை வயிற்றுக்கு தேவைப்படும்போது பம்ப் செய்வதாகும். பித்தநீர் கொழுப்பு செரிமானத்திற்கு  இன்றியமையாதது ஆகும். கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர், பித்தப்பையில் கெட்டியாக்கப்பட்ட நிலையில் சேமிக்கப்படுகிறது. பித்தப்பை அகற்றப்பட்டு இருந்தால் பித்தநீர் சேமிக்க இடமில்லாத காரணத்தால், நீர்த்த நிலையில் உள்ள பித்தநீர் நேரடியாக சிறு குடலுக்குள் சென்று சேர்கிறது.

பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் உணவை நாள் முழுவதும் பரப்பி சிறிய அளவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு முட்டையில் தோராயமாக 11 கிராம் கொழுப்பு உள்ளது. பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஒரு முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு உடனடியாக உடல் பொறுத்துக்கொள்ள சற்றே கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் உடல் சில நாட்களில் அடஜஸ்ட் ஆகி, ஒரு முட்டையை ஒரு வேளையில் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் எழாது. குறைந்த கொழுப்புள்ள உணவு எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 40-60 கிராம் அளவிலான கொழுப்பு அனுமதிக்கப்படுகிறது. பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நாளைக்கு ஒரு முட்டையை சாப்பிடுவது ஒரு பிரச்சனையாக அநேகமாக இருக்காது. நீங்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முழு முட்டைகள் எடுக்கலாம். இரண்டு முட்டைகளையும் இரண்டு வெவ்வேறு வேளைகளில் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். காலையில் ஒன்றும், பிற்பகலில் ஒன்றும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Gallbladder Removal Surgery in Chennai regularly. Dr Maran is one of the best surgeons for Gallbladder surgery in Chennai

For More Information about Gallbladder Removal Surgery Chennai visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com to know more about Gallbladder surgery Chennai.

Comments

Popular posts from this blog

Can you still undergo weight loss after gallbladder removal surgery?

பித்தப்பையை தாக்கும் பிற நோய்கள்

Can Gallstones cause Jaundice?